சத்தத்தினால் உண்ட பித்தத்தினால் 
காதல் யுத்ததினால் எனது 
ரத்ததினால் 
கவிதை எழுதி வைத்தேன் தோழி. 
இரு கண்ணிருந்தால் வாசித்து போடி. 
கண் பார்த்ததும், கெண்டை கால் பார்த்ததும் 
உன்னை பெண் பார்த்ததும், 
தள்ளிப்பின் பார்த்ததும் 
சுட்டாலும், மறக்காது நெஞ்சம். 
முற்றும் சொன்னத்தில்லை தமிழுக்கு பஞ்சம். 
கண்டிப்பதால், என்னை நிந்திப்பதால், 
நெஞ்சை தண்டிப்பதால், தலையை துண்டிப்பதால், 
தீராது என் காதல் என்பேன். 
நீ தீ அள்ளி தின்னச்சொல் தின்பேன். 
உம் என்று சொல், இல்லை நில் என்று கொல். 
என்னை வாவென்று சொல் இல்லை போவென்று கொல். 
உம் என்றால் உள்ளதடி சொர்க்கம். 
நீ இல்லை என்றால் ஈடுகாடு பக்கம்.