Saravanan's Link Blog..!
தீதும் நன்றும் பிறர் தர வாரா Wednesday, May 19, 2004
Pa. Raghavan's blog : மன்மோகன்சிங் - சில குறிப்புகள் .... படையப்பா படத்தில் ஒரு மலைப்பகுதியை அகழ்ந்து பதப்படுத்த படையப்பர் முயற்சிப்பாரே, அந்த மாதிரி ஒரு காரியத்தைக் கையிலெடுத்து வேலை பார்க்க ஆரம்பித்தார் சிங். ஆனால் சிங் செய்தது நிஜத்தில். 1994ல் அவர் தம் பட்ஜெட்டை சமர்ப்பித்தபோது உலகமே வியந்து பாராட்டியது நினைவுக்கு வருகிறது. ... முழுக்க முழுக்க சொந்த புத்தி, திறமையை மட்டுமே நம்பிப் பொதுவாழ்வுக்கு வந்தவர் டாக்டர் மன்மோகன் சிங். இத்தனைக்கும் அவருக்கு அரசியல் தெரியாது. தெரியாது என்பதுதான் அவர் பலம். அவரது கிரவுண்டு பொருளாதாரம். அதில் அவர் விற்பன்னர். போதாது? இந்தியப் பொருளாதார மறுமலர்ச்சியின் தந்தை என்று மன்மோகன்சிங்கைச் சொல்லுவார்கள். ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹாவெல்லாம் இந்தவகையில் சிங்குக்குப் பேரன்கள்தான். இன்றைய தேதியில் காங்கிரஸ்தான் அடுத்த ஆட்சி அமைக்கிறது என்கிற பட்சத்தில் மன்மோகன் சிங்கைக் காட்டிலும் பொருத்தமானதொரு தலைவர் வேறு கிடையாது. ... டாக்டர் சிங்கைப் பிரதமராக முன்னிறுத்தியதன்மூலம் சோனியா தன் அரசியல் முதிர்ச்சியை முதல்முறையாக வெளிக்காட்டியிருக்கிறார் என்பேன். எத்தரப்பு அரசியல்வாதிகளும் குறைகாண முடியாத தேர்வு அது. அடுத்த தேர்தலுக்குள் எப்படியும் ராகுல் வயசுக்கு வந்துவிடுவார். இந்தமுறை செய்கிற சீர்திருத்தங்கள், நன்மைகளை முதலீடாகப் போட்டு அடுத்தமுறையும் பிழைத்துக் கிடந்து ஜெயித்தால் குடும்ப அரசியலை அப்போது வளர்த்துக்கொள்ளலாம் என்று அவர் கருதியிருக்கக்கூடும். .... http://www.tamiloviam.com/writerpara/page.asp?ID=177&fldrID=1 AdventNet - Excellence Matters
Comments:
Post a Comment
|
|