Pa. Raghavan's writing about Mouni!
http://www.tamiloviam.com/writerpara/page.asp?ID=179&fldrID=1
அறிவின் கண்டுபிடிப்பில் ஆகச்சிறந்த விஷயம் அணு என்று கொள்வோமானால், மனத்தின் கண்டுபிடிப்பில் அத்தகையது எழுத்து. இரண்டையும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். ஒரு நல்ல எழுத்தின் மிகச் சிறந்த குணம், அது சக மனிதர்களை நேசிக்கக் கற்றுத்தருவதாக இருப்பது என்று எனக்குச் சொல்லிக்கொடுத்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
நேசிப்பு எப்படிச் சாத்தியமாகிறது? தடையற்ற அன்பு மனத்தில் பொங்குகிறபோது. அன்பு சுரக்கும் ஊற்றாக மனம் எப்போதும் ஈரத்துடன் இருக்கும்போது. ஈரம் வற்றாத நிலமாக மனம் எப்போதும் இருக்கிற அளவுக்கு அங்கே வாழ்வின் மீதான நம்பிக்கை வேரோடி இருக்கும்போது.
AdventNet - Excellence Matters