காளிப்பாட்டு
யாதுமாகி நின்றாய் காளி! எங்கும் நீ நிறந்தாய்!
தீது நன்மை யெல்லாம் - காளி! தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் - காளி! - பொறிக ளைந்தும், ஆனாய்
இன்ப மாகி விட்டாய் - காளி - என்னுளே - புந்தாய்!
பின்பு நின்னை யல்லால் - காளி! பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய் - காளி! - ஆண்மை தந்துவிட்டாய்,
துன்பம் நீக்கி விட்டாய் - காளி - தொல்லை போக்கிவிட்டாய்.