Saravanan's Link Blog..!
தீதும் நன்றும் பிறர் தர வாரா Wednesday, October 26, 2005
காணி நிலம் வேண்டும் காணி நிலம் வேண்டும் - பரசக்தி காணி நிலம் வேண்டும்; எங்கு தூணில் அழகியதாய் - நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய் - அந்தத் காணி நிலத்தினிடையே - ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் - அங்குக் கேணியருகினிலே - தென்னைமரம் கீற்று மிள நீரும், பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல முத்துச் சுடர்போல - நிலாவொளி முன்பு வரவேணும்; அங்கு கத்துங் குயிலொசை - சற்றே வந்து காதிற் படவேணும்; - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்ற வரவேணும் பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும் - எங்கள் குட்டுக் களியினிலே - கவிதைகள் கொண்டுதர வேணும் - அந்தக் காட்டு வெளியினிலே - அம்மா நின்றன் காவலுற வேணும்; - என்றன் பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப் பாýத்திட வேணும்..
Comments:
Post a Comment
|
|