Saravanan's Link Blog..!
தீதும் நன்றும் பிறர் தர வாரா Monday, January 30, 2006
விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது? Just highlighting the the lines I like in this song. This song was originally typed in this page http://thiraippaadal.blogspot.com/2006/01/32.html இல்லை இல்லை சொல்ல, ஒரு கணம் போதும்! இல்லை என்ற சொல்லை, தாங்குவதென்றால், இன்னும் இன்னும் எனக்கோர், ஜென்மம் வேண்டும்! என்ன சொல்லப் போகிறாய்? சந்தனத் தென்றலை, ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? நியாயமா? காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன? மெளனமா? மெளனமா? அன்பே எந்தன் காதல் சொல்ல, நொடி ஒன்று போதுமே! அதை நானும் மெய்ப்பிக்கத்தானே, ஒரு ஆயுள் வேண்டுமே! (இல்லை) இதயம் ஒரு கண்ணாடி! உனது பிம்பம் வீழ்ந்ததடி! இதுதான் உன் சொந்தம், இதயம் சொன்னதடி...! கண்ணாடி பிம்பம் கட்ட, கயிறொன்றும் இல்லையடி! கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி! நீ ஒன்று சொல்லடி பெண்ணே - இல்லை நின்று கொல்லடி கண்ணே! எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில், என்னைத் துரத்தாதே! உயிர் கரையேறாதே! (இல்லை) விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது? பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி! இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது? கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி! பல உலக அழகிகள் கூடி - உன் பாதம் கழுவலாம் வாடி! என் தளிர் மலரே இன்னும் தயக்கம் என்ன? என்னைப் புரியாதா இது வாழ்வா? சாவா? (இல்லை) என்ன சொல்லப் போகிறாய்?என்ன சொல்லப் போகிறாய்? நியாயமா? நியாயமா? என்ன சொல்லப் போகிறாய்?என்ன சொல்லப் போகிறாய்? மெளனமா? மெளனமா? என்ன சொல்லப் போகிறாய்.....?
Comments:
Post a Comment
|
|