Saravanan's Link Blog..!
தீதும் நன்றும் பிறர் தர வாரா Monday, January 30, 2006
நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி...! I'm just highlighting the lines I like. The content was copied from http://thiraippaadal.blogspot.com/2006/01/27.html மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு - சில
மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு! மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு - சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு! தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு - மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு! மோகனமே உன்னைப் போல - என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை! ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல - எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை! (மேகங்கள்) பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்! எரியும் உடலென்று தெரியும் பெண்ணே! என் இளமைக்குத் தீயிட்டு எரிக்க மாட்டேன்! (மேகங்கள்) கண்ணிமையில் சாமரங்கள் வீசும் காற்றில் - என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்! துண்டு துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம் - அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்! (மேகங்கள்) செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்! - உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்? எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் - அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்? இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் - என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்! (மேகங்கள்) மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம் - மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி! ஓடி ஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே! - நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி...! (மேகங்கள்)
Comments:
Post a Comment
|
|